சுகயீனமுற்ற 3 மாத குழந்தைக்கு அதிகளவான மாத்திரைகளை உட்கொள்ள கொடுத்ததாக கூறப்படும் தாயின் காதலன் ரிதிகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குருணாகல் – ரிதிகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்டவர் இராணுவ முகாமிலிருந்து தப்பிச் சென்ற 22 வயதுடைய இளைஞன் ஆவார்.

சந்தேக நபர் சுகயீனமுற்ற குழந்தையின் தாயுடன் நீண்ட காலமாக தகாத உறவில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தன்று, இந்த குழந்தை திடீரென சுகயீனமுற்றுள்ள நிலையில் சந்தேக நபர் குழந்தைக்கு அதிகளவு மாத்திரைகளை உட்கொள்ள கொடுத்துள்ளார்.

இதனால் கடும் சுகயீனமுற்ற குழந்தை உடனடியாக குருணாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ரிதிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version