மத்தியப் பிரதேசத்தில் இன்ஸ்டாகிராம் நேரடி அமர்வின் போது ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் அவரின் மனைவி மற்றும் மாமியார் கைது செய்யப்பட்டனர்.

போலீசார் கூற்றுப்படி, மத்தியப் பிரதேசம், ரேவா மாவட்டத்தில் வசித்து வந்த சிவபிரகாஷ் திரிபாதி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிரியா சர்மாவை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு இரு மகள் இருக்கிறாள். ஆனால் பிரியாவுக்கு வேறொருவருடன் தொடர்பு இருப்பதை சிறுது காலத்திலேயே சிவப்பிரகாஷ் அறிந்து கொண்டார். இதனால் இருவருக்கும் இடையில் பிரச்சனை இருந்து வந்துள்ளது.

இதற்கிடையே ஒரு விபத்தில் சிவபிரகாஷ் படுகாயமடைந்த பின்னர் மனைவி பிரியா தனது பிறந்த வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் மனஉளைச்சலில் இருந்த சிவப்பிரகாஷ் கடந்த மார்ச் 16 ஆம் தேதி இன்ஸ்டாகிராம் லைவ் ஸ்ட்ரீமிங் நேரலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

நேரலையில் தற்கொலைக்கு முன் பேசிய அவர், தனது மனைவியும் மாமியாரும்தான் தற்கொலைக்கு காரணம் என்றும் திருமண வாழ்க்கையால் தனது சந்தோஷத்தை இழந்துவிட்டதாகவும் கூறினார்.

சிவபிரகாஷ் தற்கொலை செய்துகொள்ளும் 44 நிமிடங்கள் இன்ஸ்டா நேரலையை அவரது மனைவி பிரியாவும், மாமியாரும் பார்த்துக்கொண்டிருந்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக வழகுபதவு செய்து விசாரித்து வந்த போலீசார் தற்போது பிரியாவையும் அவரது தாயையும் கைது செய்துள்ளனர். “,

Share.
Leave A Reply

Exit mobile version