மியன்மாரின் மத்திய பகுதியில் 7.3 ரிச்டர் அளவில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டுள்ளது. இந்த பூகம்பம் தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கிலும் உணரப்பட்டுள்ளது.
பூகம்பத்தால் கட்டிடங்கள் மிகப்பெரிய அளவில் குலுங்கியதால் மக்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியேறியுள்ளனர்.
பூகம்பத்தின் மையம் மத்திய மியான்மரில், மோனிவா நகரிலிருந்து கிழக்கே சுமார் 50 கிலோமீட்டர் (30 மைல்) தொலைவில் இருந்துள்ளது.
உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகின்றது.