47 வருடங்களுக்குப் பின்னர் யாழ்ப்பாணம் மற்றும் திருச்சிக்கு இடையிலான விமான சேவை இன்று 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இண்டிகோ விமான சேவை நிறுவனத்தினால் இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, திருச்சியிலிருந்து 27 பணிகளுடன் இன்று மதியம் 02.02 க்கு விமானமொன்று பலாலி விமான நிலையத்தை வந்தடைந்தது.
அதேநேரம், பலாலி விமான நிலையத்திலிருந்து மீண்டும் 36 பயணிகளுடன் குறித்த விமானம் மாலை 3 மணியளவில் திருச்சியை நோக்கிப் புறப்பட்டது.
இந்தநிலையில், எதிர்வரும் தினங்களில் குறித்த விமானமானது திருச்சியிலிருந்து பிற்பகல் 1.25 க்கு புறப்பட்டு பிற்பகல் 2.25 க்கு யாழ்ப்பாணத்தை வந்தடையவுள்ளது.
பின்னர், யாழ்ப்பாணத்திலிருந்து பிற்பகல் 3.05 க்கு புறப்படும் விமானம், மாலை 4.05 க்கு திருச்சியைச் சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.