“கொழும்பில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றின் 31ஆவது மாடியில் இருந்து விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் அந்த ஹோட்டலின் ஒரு அறையில் தங்கியிருந்தவர் என எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இருப்பினும், அவர் இறப்பதற்கு முன்பு எழுதிய ஒரு கடிதமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதில், “அம்மா என்னை மன்னித்துவிடுங்கள், நான் மிகவும் சோர்வாக இருக்கிறேன்… நான் எப்போதும் உங்களைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறேன்…” என்று எழுதப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version