15க்கும் மேற்பட்ட சிறுவர்களின் முதுகுப்பைகள் கிழிந்த நிலையில் காணப்படுகின்றன,பல்வேறு நிறங்களில் அவற்றிலிருந்து புத்தகங்கள் வெளியே விழுந்து கிடக்கின்றன.

ஸ்பைடர்மான் விளையாட்டு பொருட்கள்,மற்றும் எழுத்துக்கள் உடைந்து போன கதிரைகள் மேசைகள், காணப்படுகின்றன – பூகம்பத்தினால் முற்றாக அழிந்து போன மியன்மாரின் பாலர் பாடசாலையொன்றிலேயே இந்த காட்சிகளை காணமுடிகின்றது.

இது மண்டலாயிலிருந்து தெற்கே 40 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கியாக்ஸோ நகரில் இந்த ஆரம்பபாடசாலை உள்ளது.பூகம்பத்தினால் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் இதுவும் ஒன்று.

தனது பேத்தியான தெட்டெர் சன்னிற்கு இறுதி நிகழ்வை செய்வதற்காக தனது குடும்பத்தினர் தயராகிவருவதாகதெரிவிக்கும் 71 வயது கைவே நையின் விம்மிஅழுகின்றார்.

சிறுமியின் தாயார் மதியஉணவருந்திக்கொண்டிருந்தவேளை பூகம்பம் தாக்கியது என தெரிவிக்கும் அவர் தாயார் பாடசாலைக்கு ஓடினார் ஆனால் அது தரைமட்டமாகியிருந்தது என குறிப்பிடுகின்றார்.

சிறுமியின் உடல் மூன்று மணிநேரத்தின் பின்னர் மீட்கப்பட்டது, அதிஸ்டவசமாக எங்கள் அன்புக்குரியவளின் உடல் முழுமையாக கிடைத்தது என்கின்றார் அவர்.

இரண்டு முதல் ஏழு வயதுவரையிலான 70 சிறுவர்கள் அந்த பாடசாலையில் மிகவும் மகிழ்ச்சியாக கற்றலில் ஈடுபட்டிருக்கொண்டிருந்தனர் என உள்ளுர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

12 மாணவர்களும் ஒரு ஆசிரியரும் உயிரிழந்ததாக பாடசாலை நிர்வாகம் தெரிவிக்கின்றது ,ஆனால் அந்தபகுதி மக்கள் 40 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கின்றனர், பூகம்பம் தாக்கியவேளை கீழ்தளத்தில் அத்தனை மாணவர்களே இருந்துள்ளனர்.

அந்த பகுதி மக்களும் பெற்றோரும் பெரும்துயரத்தில் சிக்குண்டுள்ளனர்,முழு நகரமும் மீட்பு பணியில் ஈடுபட்டது என தெரிவிக்கும் மக்கள் பல உடல்கள் மீட்கப்பட்டன என குறிப்பிட்டனர்.

இரவிரவாக தங்கள் பிள்ளைகளின் பெயர் சொல்லி கூப்பிட்ட தாய்மார்கள் கதறியதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் தற்போது குவிந்துகிடக்கின்ற கற்கள்,கொன்கிறீட் மற்றும் இரும்பு துண்டுகள் ஆகியவற்றை தவிர வேறுஎதுவும் அங்கு தென்படவில்லை.

மூன்று நாட்களின் பின்னர் அந்த பகுதி அமைதியாக காணப்படுகின்றது, மக்கள் துயரம் தோய்ந்த முகங்களுடன் என்னை பார்த்தனர்.

மருத்துவமனைகள் முற்றாக சேதமடைந்துள்ளதாலும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகளவாக காணப்படுவதாலும்,மியன்மாரில் மனிதாபிமான நெருக்கடி மேலும் மோசமடைகின்றது என மனிதாபிமான அமைப்புகள் தெரிவிக்கின்றன, எனினும் இதுவரை முழுமையான அழிவின் அளவு தெரியவில்லை.

நாங்கள் கியூக்சேவிற்கு செல்வதற்கு முன்னர் தலைநகரான நேபிதாவிற்கு சென்றோம்.

அரசாங்க ஊழியர்கள் வசிக்கும் பகுதியே மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது,கீழ்தளம் முற்றாக சேதமடைந்துள்ளது. ஆனால் அதன் மேல் மூன்று மாடிகள் சேதம் எதுவுமின்றி காணப்படுகின்றன.

இடிபாடுகளிற்குள் இரத்தக்கறைகளை காணமுடிகின்றது,அங்கிருந்து வரும் துர்நாற்றம் பலர் உயிரிழந்திருக்கலாம் என்பதை தெரிவிக்கின்றது ஆனால் அங்கு மீட்பு பணி இடம்பெறுவதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை.

Share.
Leave A Reply

Exit mobile version