அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள யாக் கவுண்டி பகுதியில், பொலிஸ் அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் மேலும் 2 பேர் காயமடைந்தனர். துப்பாக்கிச்சூடு மேற்கொண்ட நபர், பின்னர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
பென்சில்வேனியாவில் உள்ள நோர்ட் கோடோரஸ் நகரில், குற்றவாளியைக் கைது செய்யச் சென்ற பொலிஸார் மீது வியாழக்கிழமை (செப். 18) குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
24 வயதுடைய மத்தேயு ரூத் (Matthew Ruth) என்ற இளைஞர், அவரது முன்னாள் காதலியை துன்புறுத்தியதாக கிடைத்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு பொலிஸார் சென்றுள்ளனர்.
பொலிஸார் அவர் இருந்த வீட்டிற்குள் நுழைந்தபோது, குறித்த இளைஞன் தன் வசம் வைத்திருந்த துப்பாக்கியால் அவர்களை நோக்கிச் சுடத் தொடங்கினார்.
இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தில், ஐந்து பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 6 பேர் காயமடைந்தனர். இதில் மூன்று பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
சந்தேகநபரான ரூத்தின் முன்னாள் காதலி, ஆகஸ்ட் மாதத்தில் தனது காரை ரூத் எரித்துவிட்டதாகவும், மாறுவேடத்தில் தனது வீட்டிற்கு வெளியே தன்னை வேவு பார்த்ததாகவும் பொலிஸாரிடம் முறைப்பாடு அளித்திருந்தார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், சந்தேக நபரான ரூத் மறைந்திருந்த வீட்டிற்குள் பொலிஸார் நுழைந்தபோது, ரூத் துப்பாக்கிச்சூடு நடத்திய நிலையில, பதிலுக்கு பொலிஸார் துப்பபாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட நிலையில், ரூத் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அமெரிக்காவில், துப்பாக்கி வன்முறை அதிகரித்து வரும் சூழலில், பொலிஸ் அதிகாரிகள் மீதான இந்தத் தாக்குதல், நாட்டின் பாதுகாப்பு குறித்த கவலைகளை மேலும் அதிகரித்துள்ளது.