தமிழ் சினிமாவில் யதார்த்தமான கதை சொல்லலுக்கும், உணர்ச்சிகரமான படைப்புகளுக்கும் பெயர் பெற்றவர் இயக்குநர் பாலா. அவரது படங்களில் நடிக்கும் நடிகர்கள், பெரும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.
அந்த வகையில், பாலாவின் முதல் படமான ‘சேது’ மற்றும் ‘நந்தா’ ஆகிய படங்களில் நடித்த அனுபவத்தை சமீபத்தில் பிரபல நடிகை ராஜஸ்ரீ ஒரு பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.
அவரது பேச்சு, பாலாவின் இயக்க முறையையும், ‘சேது’ படப்பிடிப்பின் சவால்களையும் வெளிப்படுத்துவதாக அமைந்து, ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
1999 ஆம் ஆண்டு வெளியான ‘சேது’ படம், சியான் விக்ரமின் திரை வாழ்வில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. இதில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்த ராஜஸ்ரீ, படத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தை ஏற்றிருந்தார்.
ஆனால், அந்த படப்பிடிப்பு அவருக்கு மறக்க முடியாத ஒரு சவாலாக இருந்ததாக அவர் பகிர்ந்து கொண்டார். “சேது படத்தில் நடிக்கும் போது, ஒவ்வொரு காட்சியை நடித்து முடிக்கும் போதும், ‘டேய் பாலா, எப்போ இந்த படம் முடியும்?’ என்று கேட்கத் தோன்றும்,” என்று ராஜஸ்ரீ கூறினார்.
படப்பிடிப்பு தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் நடந்ததாகவும், அந்த காலகட்டத்தில் ஒரே ஆடையை துவைக்காமல் அணிய வேண்டிய சூழல் இருந்ததாகவும் அவர் விவரித்தார். “ஒரே சட்டையை போட்டுக்கொண்டு, துவைக்காமல், கசங்கிய நிலையில், அழுக்கு துர்நாற்றம் என அனைத்தையும் தாங்கிக்கொண்டு நடிக்க வேண்டியிருந்தது.
‘எப்ப அவுத்து போட்டா நல்லா இருக்கும்.. ?’ என்ற எண்ணமே மனதில் இருந்தது,” என்று அவர் புலம்பினார். இயக்குநர் பாலா, காட்சிகளை தத்ரூபமாக கொண்டு வருவதற்காக, நடிகர்களை இப்படியான கடினமான சூழல்களுக்கு உட்படுத்துவது அவரது பாணியாக இருந்தது.
ராஜஸ்ரீ மேலும் ஒரு சுவாரஸ்யமான அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். படத்தின் கடைசி காட்சியில், அவர் சோகமாக வானத்தை பார்ப்பது போன்ற ஒரு காட்சி படமாக்கப்பட்டது.
அது தான் படத்தின் கடைசி ஷாட் என்று பாலா அவரிடம் கூறியிருந்தார். “அந்த காட்சியை படமாக்கும் போது, ‘இதுதான் கடைசி காட்சி, இனிமேல் இந்த படப்பிடிப்புக்கு என்னை கூப்பிட மாட்டார்கள்’ என்ற மகிழ்ச்சியில் இருந்தேன்.
மனதில் மகிழ்ச்சியாக இருந்தாலும், முகத்தில் சோகத்தை வைத்துக்கொண்டு நடித்தேன். ஷாட் ஓகே ஆனதும், எனக்கு மிகப்பெரிய சந்தோஷம்,” என்று அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார்.
இயக்குநர் பாலா என்றாலே, காட்சிகளை மிகவும் யதார்த்தமாக கொண்டு வருவதற்காக நடிகர்களை எந்த அளவுக்கு கஷ்டப்படுத்த முடியுமோ, அந்த அளவுக்கு கஷ்டப்படுத்துவார் என்பது அனைவரும் அறிந்த விஷயம்.
முன்னணி நடிகர்களே அவரது இயக்கத்தில் சிக்கி சின்னாபின்னமாகியிருக்கின்றனர். சிலர் படப்பிடிப்பை பாதியிலேயே விட்டு ஓடியிருக்கின்றனர்.
ஆனால், பாலாவின் படத்தில் நடித்தால், பத்து படங்களில் நடித்த அனுபவத்தை பெறலாம் என்று பல நடிகர்கள் கூறியிருக்கின்றனர். இதை ராஜஸ்ரீயின் அனுபவமும் உறுதிப்படுத்துகிறது.
‘சேது’ படம், தமிழ் சினிமாவில் ஒரு மைல்கல்லாக அமைந்தது. விக்ரமின் தீவிரமான நடிப்பு, அவரை ‘சியான்’ என்ற பட்டத்தை பெற வைத்தது. பாலாவின் யதார்த்தமான இயக்கம், தமிழ் சினிமாவில் ஒரு புதிய அலையை உருவாக்கியது.
ராஜஸ்ரீயை பொறுத்தவரை, இந்த படம் அவருக்கு ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. “பாலாவின் இயக்கத்தில் நடிப்பது ஒரு பெரிய சவால். ஆனால், அது ஒரு நடிகையாக என்னை வளர்த்தது,” என்று அவர் முன்பு ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்