இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (10) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 303.26 ரூபாவாகவும், கொள்வனவு விலை 294.13 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அத்தோடு, கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 216.27 ரூபாவாகவும், கொள்வனவு விலை 206.89 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 334.63 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 320.78 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம் | Today Dollar Rate Rupee Usd To Lkr

இதேவேளை, ஸ்டேலிங் பவுண் ஒன்றின் விற்பனை பெறுமதி 391.00 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 376.53 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலரின் விற்பனை பெறுமதி 188.44 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 178.96 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது

Share.
Leave A Reply

Exit mobile version