“பஞ்சாப் மாநிலம் சோனிபட் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியை சேர்ந்த மாணவன் தனது காதலியை சூட்கேசில் அடைத்து தான் தங்கியிருக்கும் பாய்ஸ் ஹாஸ்டலுள் கொண்டு செல்ல முயன்ற சம்பவம் அரங்கேறி உள்ளது.

ஆனால் அந்த பெண் திடீரென சத்தம் எழுப்பியதால் மாணவனின் திட்டம் தோல்வியடைந்தது. சத்தம் கேட்டவுடன் செக்யூரிட்டிகள் மாணவனைத் தடுத்து நிறுத்தினர்.

அவர்கள் சூட்கேஸைத் திறந்ததும் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.தற்போது வைரலாகி வரும் காணொளியில், காரிடாரில் வைத்து சில காவலர்கள் ஒரு பெரிய சூட்கேஸைத் திறப்பதைக் காணலாம்.

சூட்கேஸ் திறந்ததும், அதனுள் இருந்து ஒரு பெண் வெளியே வருகிறாள்.அங்கிருந்தவர்கள் இந்தக் காட்சியைத் தங்கள் மொபைல் போன்களில் பதிவு செய்தனர்.

இணையத்தில் பரவி வரும் இந்த காணொளி அனைவரிடையேயும் சிரிப்பலையை ஏற்படுத்தி வருகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version