தொரட்டியாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருணாகல் – தம்புள்ளை A6 வீதியில் இடம்பெற்ற விபத்தில் 2 பேர் மரணமடைந்துள்ளனர்.
குருணாகல் வடக்கு டிப்போவிற்கு அருகில் நேற்று (15) இடம்பெற்ற இவ்விபத்தில், தம்புள்ளையிலிருந்து குருணாகல் திசை நோக்கிச் சென்ற கெப் வண்டி ஒன்று, எதிர்த் திசையில் இருந்து வந்த முச்சக்கர வண்டியுடனும் மோட்டார் சைக்கிள் ஒன்றுடனும் மோதி இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
முச்சக்கரவண்டி சாரி மற்றும் அதன் பின்னால் அமர்ந்து பயணித்த ஒருவர ஆகிய இருரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் கல்கிரியாகம பகுதியைச் சேர்ந்தவ 37 மற்றும் 43 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
விபத்துக்குக் காரணமான கெப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் மதுபோதையில் வாகனம் செலுத்தியுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
தொரட்டியாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.