இலங்கையில் காணப்படும் போருக்கு பிந்திய நீண்ட மற்றும் வேதனையான சூழ்நிலையை கருத்தில் கொண்டு, தீர்க்கப்படாத படுகொலைகள் மற்றும் மறக்கப்பட்டவர்கள் பாதிக்கப்பட்டவர்களின் ஆவிகள் நமது தேசிய மனச்சாட்சியின் நிழலாக தொடர்கின்றன.

அவ்வாறான இரண்டு சம்பவங்கள் -வெலிக்கந்தை படுகொலை( மே 2006) கெப்பிட்டிகொலாவ கிளைமோர் தாக்குதல் ( ஜூன் 2006) சிங்கள மக்களின் உணர்வுகளை மிக மோசமாக பாதித்தன.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் இந்த இரண்டு அட்டுழியங்களிற்கு எதிராகவும் உடனடியாக அரசியல் கண்டன பிரேரணை நிறைவேற்றப்பட்டது,இரு சம்பவங்களும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் யுத்த தந்திரோபாயத்தை வலுப்படுத்துவதற்கு உதவின.

ஆனால் இரண்டு தசாப்தங்களின் பின்னர்,புதிய தாக்குதல்கள் புதிய கேள்விகளை எழுப்புகின்றன.நீருக்கு அடியில் அழுத்தப்பட்ட பந்து மேலே வரமுயல்வது போல புதிய கேள்விகள் மேலே வரத்துடிக்கின்றன.

உண்;மையிலே இந்த கொலைகளிற்கு யார் தலைமை தாங்கினார்கள்? போருக்கு பிந்தைய அரசியல் கட்டமைப்பில் உண்மையான குற்றவாளிகளிற்கு தண்டனை கிடைக்கவில்லையா?பாதுகாப்பு கிடைத்ததா?

ரப்பர் பந்து போன்று மீண்டும் மீண்டும் தோன்றும் ஒருபெயர் – சந்திரகாந்- சிவனேசதுரை பிள்ளையான்

வெலிக்கந்தை பொலனறுவையில் காட்டுபகுதியில் அரசநிதியுடன் கால்வாய் ஒன்றினை அமைத்துக்கொண்டிருந்த 13 சிங்கள விவசாயிகள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்கள்.

அவர்கள் உடல்கள் மீட்கப்பட்டவேளை நானும் அங்கிருந்தேன்,13 பேரினதும் கைகள் பின்னால் கட்டப்பட்டிருந்தன.கழுத்தை ஒரு கூர்மையான ஆயுதத்தால் வெட்டியிருந்தனர்.

மகிந்த ராஜபக்ச அரசாங்கம் இலகுவாக விடுதலைப்புலிகள் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தியது,விடுதலைப்புலிகளின் ஊடக பேச்சாளர் தயா மாஸ்டர் தமிழ்நெட் ஊடாக இதனை நிராகரித்தார்.

இந்த சம்பவம் இடம்பெற்று இரண்டு வாரங்கள் கடந்த நிலையில் 15ம் திகதி பொதுமக்கள் பயணித்துக்கொண்டிருந்த பேருந்து கிளைமோரில் சிக்கியது.சிறுவர்கள் உட்பட 60 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த இரண்டு தாக்குதல்களும் எல்லை பகுதியில் இடம்பெற்றன, இந்த சம்பவங்கள் இடம்பெற்ற பகுதி விடுதலைப்புலிகளின் நிர்வாகத்தின் கீழ் காணப்பட்ட பகுதிகளிற்கு அருகில் மாத்திரம் இருக்கவில்லை,இந்த சம்பவம் இடம்பெற்ற பகுதிகள் இலங்கை இராணுவம் மற்றும் தமிழ் துணைப்படையினரின் கோட்டைக்கு அருகிலும் காணப்பட்டன.

இந்த தாக்குதலிற்கும் விடுதலைப்புலிகளே காரணம் என ராஜபக்ச அரசாங்கம் குற்;றம்சாட்டியது , விடுதலைப்புலிகள் வழமைக்கு மாறான ஒரு விதத்தில் இதனை நிராகரித்தனர்.

சர்வதேச கண்காணிப்பாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் குற்றச்சாட்டுகளை சுமத்தினார்கள்,ஆனால் இந்த இரண்டு சம்பவங்களையும் விடுதலைப்புலிகள் செய்தார்கள் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை.

இந்த தாக்குதல்களை ஆழமாக ஆராய்ந்தால்,அந்த நேரத்தில் அந்த பகுதிகளை யார் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தார்கள் என்பது மிக முக்கியமான விடயமாக காணப்படும்.

2006ம் ஆண்டளவில், கருணா அம்மானின் தலைமைத்துவத்தின் கீழ் அரசியல் இராணுவரீதியில் பிள்ளையான் உருவாக்கிய தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பு இராணுவ புலனாய்வு பிரிவுடன் இணைந்து செயற்பட ஆரம்பித்திருந்தது.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பு கிழக்கில் அரசாங்கத்திற்கு ஆதரவான அமைப்பாக, விடுதலைப்புலிகளிற்கு எதிராக செயற்பட தொடங்கியிருந்தது.

உள்ளுர் செய்தியாளர்கள் ( நானும்) அவர்கள் அந்த பகுதியில் நடமாடுவதை உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருந்தோம்,அந்த பகுதியில் இலங்கை இராணுவத்தினதும்,தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளினதும் ரோந்து நடவடிக்கைகளை அவதானிக்க முடிந்தது.

அவ்வாறான பின்னணியில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் அனுமதியின்றி,அல்லது அந்த அமைப்பை இயக்குபவர்களின் ஆதரவின்றி,அல்லது மௌனமான சம்மதம் இன்றி விடுதலைப்புலிகள் அவ்வாறான ஒருங்கிணைந்த தாக்குதல்களை மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாகவே காணப்பட்டன.

ஆகவே தற்போது காணப்படும் முக்கிய கேள்வி?

யுத்த நிறுத்தத்திலிருந்து முழுமையான யுத்தத்தை நோக்கி செல்வதை நியாயப்படுத்துவதற்காக இந்த படுகொலைகளை பயன்படுத்தினார்களா?

இதன் மூலம் யாருக்கு நன்மை?

யார் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள் என்பதை மாத்திரம் கருத்தில்கொள்ளாமல் இந்த படுகொலைகளின் பின்னர் உருவான சூழ்நிலையால் யார் நன்மையடைந்திருப்பார்கள் என சிந்திப்பதும் அவசியம்.

மகிந்த ராஜபக்சவை பொறுத்தவரை இந்த தாக்குதல்கள் தேசிய உணர்வை தீவிரப்படுத்துவதற்கு உதவின.அதேபோன்று இராணுவ நடவடிக்கையொன்றை நியாயப்படுத்துவதற்கு உதவின.

பிள்ளையானிற்கும் – அவரது அமைப்பிற்கும தாங்கள் அரசாங்கத்தின் உறுதியான விசுவாசிகள் என்ற நிலையை உறுதி செய்துகொள்வதற்கு இந்த படுகொலைகள் உதவின.மேலும் இந்த படுகொலைகள் அவர்களிற்கு அரசியல்ரீதியில் சட்டபூர்வமான தன்மை கிடைப்பதற்கும் இறுதியில் கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி கிடைப்பதற்கும் வழிவகுத்தன.

ஒரு பரந்துபட்ட அரசபொறிமுறையை பொறுத்தவரை- இந்த சம்பவங்கள் விடுதலைப்புலிகளை அவமானப்படுத்துவதற்கும் , ஐக்கிய இலங்கைக்கான அரசாங்கத்தின் முயற்சிகளிற்கு சர்வதேச ஆதரவை பெற்றுக்கொடுப்பதற்கும் உதவின.

தமிழில் ரஜீவன்

Ghosts of the Border: Exposing the violent legacy of Pillaiyan and penalty politics

Anuruddha Lokuhapuarachchi

 

Share.
Leave A Reply

Exit mobile version