ஏப்ரல் மாதத்தில் மட்டும் சுமார் 123,945 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் (SLTDA) தெரிவித்துள்ளது.
அதன்படி, இந்தியா, பிரித்தானியா மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளில் இருந்து பெருமளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
2025 ஏப்ரல் 20ஆம் திகதி நிலைவரப்படி, சுமார் 846,221 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகவும் இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.