தாய்லாந்தில் விமானமொன்று விபத்துக்குள்ளாகி கடலில் விழுந்துநொருங்கியதில் ஐந்து பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர்.

ஹ_வா ஹின் மாவட்டத்தில் பரசூட் பயிற்சிக்கான தயார்ப்படுத்தலில் ஈடுபட்டிருந்த விமானமே விபத்துக்குள்ளாகி விழுந்து நொருங்கியுள்ளது.

ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் உயிருக்காக போராடுகின்றார் என தாய்லாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வைக்கிங் டிஎச்சி – 6 டுவின் ஓட்டர் விமானம் ஹ_வா ஹின் விமானநிலையத்திற்கு அருகில் விபத்திற்குள்ளாகியுள்ளாகியது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காலநிலையை அவதானிப்பதற்காக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த விமானம் புறப்பட்டு ஒரு நிமிடத்தின் பி;ன்னர் கட்டுப்பாட்டை இழந்தது கடலில் விழுந்து நொருங்கியது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமானம் புறப்பட்டு ஒருசில நிமிடங்களி;ல் வெடிப்பு போன்ற சத்தம் அதன் இயந்திரத்திலிருந்து வந்தது விமானி விமானத்தை விமானநிலையத்தில் தரையிறங்குவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கரையிலிருந்து 100 மீற்றர் தொலைவில் விமானத்தின் சிதைவுகள் காணப்படுகின்றன,விமானம் இரண்டாக உடைந்துள்ளது.விமானத்தில் ஆறு பொலிஸார் காணப்பட்டனர் ஐவர் உயிரிழந்துள்ளனர்

Share.
Leave A Reply

Exit mobile version