இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக கடத்தி வரப்பட்ட 500 கிலோ கிராம் மஞ்சளுடன் ஒருவர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவில் இருந்து படகொன்றில் கடல் வழியாக கடத்தி வரப்பட்ட மஞ்சளை ஊர்காவற்துறை பகுதியில் கைமாற்றப்படவுள்ளதாக காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ,குறித்த பகுதியில் காவல்துறையினர் கண்காணிப்புக்களை தீவிரப்படுத்தி இருந்தனர்.

அந்நிலையில் மஞ்சளுடன் மூவர் சென்ற நிலையில் அவர்களை மடக்கி பிடிக்க முயன்ற வேளை இருவர் தப்பி சென்ற நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தப்பி சென்ற இருவரையும் கைது செய்வதற்கு காவல்துறையினா் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதேவேளை மீட்கப்பட்ட 500 கிலோ மஞ்சள் மற்றும் கைது செய்யப்பட்ட நபரை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக ஊர்காவற்துறை காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version