ஜெருசலேம் அருகே காட்டுத்தீ பரவியதால் இஸ்ரேல் அரசு தேசிய அவசர நிலையை அறிவித்துள்ளது.

கடும் வெப்பம் மற்றும் வறட்சி காரணமாக தீ வேகமாக பரவி வருகிறது. காட்டுத்தீ காரணமாக பல கிராமங்கள் அபாயத்தில் உள்ளன. ஏராளமான தீயணைப்பு விமானங்கள் மற்றும் நூற்றுக்கணக்கான பணியாளர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலில், 10 ஆண்டுகளில் மிக மோசமான தீ விபத்தாக இது கருதப்படுகிறது. வீடுகள் மற்றும் வனப்பகுதிகள் பெரும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளன.

பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் கூறியுள்ளார்.

கிரீஸ், சைப்ரஸ், குரோஷியா, இத்தாலி மற்றும் பல்கேரியா உள்ளிட்ட நாடுகளிடம் இஸ்ரேல் உதவி கோரியுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version