• வைரலாகும் வீடியோவில் பள்ளியின் முதல்வருக்கும் நூலகருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. ஒரு கட்டத்திற்கு மேல் அது கைகலப்பாக மாறி, இருவரும் ஒருவரை ஒருவர் அறைந்து தலை முடியைப் பிடித்து சண்டை போட்டுக் கொள்கின்றனர்.

மத்தியப் பிரதேசத்தில் உள்ள அரசு மாதிரி பள்ளியின் முதல்வருக்கும் நூலகருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம், கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மத்தியப் பிரதேசத்தின் கார்கோனில் உள்ள ஏக்லவ்ய ஆதர்ஷ் பள்ளியில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

ஏக்லவ்ய ஆதர்ஷ் பள்ளி என்பது இந்திய அரசின் பழங்குடியினர் நலசங்கத்தால் நிதி அளிக்கப்படும் ஒரு அரசு மாதிரி உண்டு உறைவிட பள்ளி ஆகும்.

இந்தப் பள்ளிகள் இந்தியா முழுவதும் பழங்குடியின மாணவர்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

வைரலாகும் வீடியோவில் பள்ளியின் முதல்வருக்கும் நூலகருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. ஒரு கட்டத்திற்கு மேல் கைகலப்பாக மாறி, இருவரும் ஒருவரை ஒருவர் அறைந்து தலை முடியைப் பிடித்து சண்டை போட்டுக் கொள்கின்றனர்.

நூலகர் தனது செல்போனில் வாக்குவாதத்தைப் பதிவு செய்கிறார். இதனால் கோபமடைந்த பள்ளியின் முதல்வர் அவரை அறைந்து அவரது செல்போனை பிடுங்கி தரையில் வீசுகிறார்.

உங்களுக்கு எவ்வளவு தைரியம்? என்று கூறியபடியே முதல்வரின் போனை எடுத்து மீண்டும் எறிகிறார் நூலகர். அதன் பின்னர் இருவரும் மாறி மாறி அறைந்து கொள்கின்றனர்.

ஒரு கட்டத்திற்கு மேல் முடியைப் பிடித்து இழுத்துச் சண்டையிட்டுக் கொள்கின்றனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

வேலை தொடர்பான பிரச்னைகள் காரணமாகச் சண்டை தொடங்கியதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் சண்டைக்கான காரணம் என்னவென்று தெரிவிக்கப்படவில்லை.

ஒரு பள்ளியில் ஆசிரியர் பொறுப்பில் இருக்கும் இவர்களே இவ்வாறு சண்டையிட்டுக் கொள்வது முறையாக இல்லை என்று இணையவாசிகள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version