மணி ரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், அபிராமி, ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘தக் லைப்’.

இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.

ஜூன் 5-ம் தேதி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

படத்தின் புரொமோஷனுக்காக நேர்காணல் ஒன்றை ஒருங்கிணைத்து அதைக் காணொளியாக ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனத்தின் யூடியூப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்கள்.

அந்த நேர்காணலில் சிம்பு, கமல்ஹாசன் குறித்துப் பேசியிருக்கிறார்.

கமல் குறித்து பேசிய சிம்பு, ” இந்தப் படத்தில் நடிப்பதற்கு ஈசியாகத்தான் இருந்தது. கமல் சார், மணி சார் இருக்கிறார்கள் எப்படி நடிக்கப்போகிறோம் என்று முதல் இரண்டு நாள்கள் மட்டுமே எனக்கு டென்ஷனாக இருந்தது.

ஆனால் கமல் சார் நல்ல கம்ஃபோர்ட் கொடுத்தார். அதன் பிறகு நம்மால் முடியும் என்ற மைன் செட்டிற்கு வந்துவிட்டேன். எனக்கு நடிப்பதில் எந்த சந்தேகம் இருந்தாலும் கமல் சாரிடம் கேட்பேன்.


நேர்காணலில்…

ஒரு காட்சியில் ஆறு, ஏழு பேர் நடித்துக்கொண்டிருந்தோம். எல்லோரும் அவர்களுடைய டயலாக்கை சரியாகச் சொல்லவேண்டும். அந்த இடத்திற்கு கமல் சார் வந்தார்.

எல்லாருடைய டயலாக்கையும் சரியாகச் சொல்லி நடித்துக் காண்பித்தார். ‘அந்நியன்’ படத்தில் வருகிற மாதிரி இரண்டு கதாபாத்திரங்களை மாறி மாறி நடிக்கலாம்.

ஆனால் கமல் சார் ஆறு, ஏழு கதாபாத்திரத்தை ஒரே நேரத்தில் நடித்துக் காண்பித்தார். அதைப் பார்த்து மிரண்டு விட்டேன். அவர் பக்கத்தில் இருந்தாலே நன்றாக இருக்கும். கமல் சாருடன் பணியாற்றியது மிகவும் உதவியாக இருந்தது” என்று கமல் குறித்து சிம்பு நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.

Share.
Leave A Reply

Exit mobile version