மாத்தறை – தெவிநுவரவில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் கற்பித்து வரும் புவியியல் ஆசிரியர் (வயது 39) ஒருவர், 14 வயது மாணவியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தினார் என்றக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவி மாத்தறை குழந்தைகள் மற்றும் மகளிர் பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்தே சந்தேக நபரான ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது தாயை இழந்து தந்தையால் கைவிடப்பட்ட 9ஆம் வகுப்பில் கல்வி கற்று வரும் மாணவியான சிறுமி, தனது தாத்தா பாட்டியுடன் வசித்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆசிரியரான சந்தேக நபர் சிறுமியுடன் நெருங்கிய உறவை வளர்த்துக் கொண்டதாகவும், தாத்தா பாட்டியின் நம்பிக்கையைப் பெறுவதற்காக அடிக்கடி பரிசுகளுடன் அவரது வீட்டிற்குச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை (11) அன்று பதிவு செய்யப்பட்ட பாதிக்கப்பட்ட மாணவியின் வாக்குமூலத்தின்படி,

ஆசிரியர் அவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாகவும், தனது மனைவியை விவாகரத்து செய்த பிறகு அவரை திருமணம் செய்து கொள்வதாகவும் உறுதியளித்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், மாணவியால் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து, சந்தேக நபர் திங்கட்கிழமை (12) கைது செய்யப்பட்டுள்ளார்,

பாலியல் வன்புணர்வு மற்றும் பாலியல் செயல்களுக்கு தூண்டுதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version