தமிழகம் முழுவதும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இத்தேர்வில் 92.09 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

வழக்கம்போல் 11-ம் வகுப்பு பொதுத்தேர்விலும் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் 88.70 சதவீதம், மாணவிகள் 95.13 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.8 சதவீதம் பெற்று அரியலூர் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது.

ஈரோடு 97 சதவீதமும், விருதுநகர் 96.2 சதவீதமும், கோவை 95.8 சதவீதமும், தூத்துக்குடி 95.1 சதவீதமும் பெற்று அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளன.

இந்த நிலையில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மதியம் இணையதளத்தில் வெளியானது. மாணவ-மாணவிகள் https://results.digilocker.gov.in, www.tnresults.nic.in என்ற இணையதளங்கள் வாயிலாக முடிவுகளை காணலாம்.”,

Share.
Leave A Reply

Exit mobile version