ஜெர்மனியில் கார்ஸ்டன் ராபர்ட் கண்டுபிடித்த நிலத்தடி மருத்துவமனை இரண்டாம் உலகப் போருக்கு முந்தையது. படுக்கைகள், ஆய்வகம், அறுவை சிகிச்சை அரங்கம் போன்றவை உள்ளன.

ஜெர்மனியின் நிலத்திற்கு அடியில் ஒரு நூற்றாண்டு பழமையான மருத்துவமனையை ஒரு நகர்ப்புற ஆய்வாளர் கண்டுபிடித்துள்ளார். அது இரண்டாம் உலகப் போருக்கு முந்தையது என்று நம்பப்படுகிறது.

ஜெர்மனியில் இருக்கும் கார்ஸ்டன் ராபர்ட், கைவிடப்பட்ட மற்றும் அச்சுறுத்தும் வகையில் இருக்கும் இடங்களை தேடி அது குறித்து பதிவு செய்வதில் ஆர்வம் கொண்டவர்.

அப்படி அவர் சமீபத்தில் கண்டறிந்த ஒரு இடம் தான் இந்த நிலத்தடி மருத்துவமனை. இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், “உங்கள் காதுகளைத் திறந்து வைத்திருங்கள், ஆரோக்கியமாக இருங்கள்” எனவும் பதிவிட்டுள்ளார்.

அவர் பதிவிட்டுள்ள வீடியோவில் அவர் முதலில் ஒரு கழிவு நீர் செல்லும் குழிக்குள் இறங்குகிறார்.

அது மருத்துவமனைக்குச் செல்லும் வழியாக இருக்கிறது. அந்த மருத்துவமனையில், படுக்கைகள், ஆய்வகம், அறுவை சிகிச்சை அரங்கம் உள்ளிட்டவை உள்ளன. கதவுகள் சிதிலமடைந்த நிலையில் இருக்கும் அந்த மருத்துவமனைக்குள் ஏராளமான மருத்துவ உபகரணங்கள் சிதறி கிடக்கின்றன.

Share.
Leave A Reply

Exit mobile version