முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல, இலஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய நிலையில், அவரை எதிர்வரும் ஜூன் மாதம் 3 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

ரமித் ரம்புக்வெல்லவின் தந்தையான கெஹலிய ரம்புக்வெல்ல ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்காக கடந்த 07ஆம் திகதி இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகிய போது ஆணைக்குழு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் இலஞ்ச வழக்கில் ரமித் ரம்புக்வெல்ல நேற்று (20) நீதிமன்றத்தால் சந்தேகநபராகப் பெயரிடப்பட்ட நிலையில், இலஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு ரமித் ரம்புக்வெல்லவுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

இதன்படி ரமித் ரம்புக்வெல்ல இன்று (21) காலை இலஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்குவதற்காக ஆரஜாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட ரமித் ரம்புக்வெல்லவை கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய நிலையில், அவரை எதிர்வரும் ஜூன் மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல அமைச்சின் நிதியிலிருந்து சுமார் 8 மில்லியன் ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரிலேயே கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version