“டெல்லியில் நேற்று இரவு முதல் வெளுத்து வாங்கிய கனமழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது.

சுமார் 200 விமான சேவைகள் பாதிக்கப்பட்டதோடு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சஃப்தர்ஜங் மற்றும் பிற பகுதிகளில் 81 மிமீ வரை மழை பதிவாகியுள்ளது.

இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் (IGI) பெருமளவில் பாதித்தது. முனையம் 1 வருகை முன் வளாகத்துக்கு வெளியே நிறுவப்பட்ட கூரை (இழுவிசை துணி) சேதமடைந்தது. துணி கிழிந்து தண்ணீர் கீழே ஊற்றும் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

பல விமானங்கள் திருப்பி விடப்பட்டதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளானார்கள். விமான நிலைய சேதம் குறித்து மத்திய, மாநில அரசை காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version