யாழ். வல்வெட்டித்துறையில் வங்கிக்கு முன்பாக மயங்கி விழுந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மாவடி சமரபாகுவைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளும் தந்தையான மகாதேவன் திலகராசா (வயது 60) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வல்வெட்டித்துறையில் உள்ள வங்கி ஒன்றுக்கும் முன்னால் நேற்று சனிக்கிழமை அவர் மயங்கிய நிலை காணப்பட்டதை எடுத்து முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் அவரை விட்டு அழைத்து சென்றுள்ளார்.

பின்னர் அவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அவர் உயிரிழந்து விட்டார் என தெரிவிக்கப்பட்டது.

இந்த மரணம் தொடர்பில் கரவெட்டி திடீர் மரண விசாரணை அதிகாரி வே. பாஸ்கரன் விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார். சாட்சிகளை வல்வெட்டித்துறை பொலிஸார் நெறிப்படுத்தினர்.

Share.
Leave A Reply

Exit mobile version