வவுனியா, ஓமந்தை பகுதியில் திங்கட்கிழமை (26) அன்று அதிகாலை டிப்பருடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகியுள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் சஜ்யிதானந்த பிரபாகர குருக்கள் வயது 52 என்பவர் பலியாகியுள்ளதுடன், அவரின் மனைவி பி.சீத்தாலட்சுமி(வயது – 50), மகன் பி.அக்ஸய் (வயது 27), மாமனார் சுவாமிநாதன் ஐயர் (வயது – 70) படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா, ஓமந்தை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.