காசாவின் அவலம் உலக நாடுகளுக்கு தெரியாது ஒன்றில்லை. தெளிவாகக் கண்டு கொள்ளும் நிலையிலேயே உலகம் காணப்படுகிறது.
ஈழத்தமிழர்கள் முள்ளிவாய்க்காலில் துடைத்து அழிக்கப்பட்டது போன்று காசாவில் பாலஸ்தீனர்கள் அவலப்படும் காட்சி உலகத்தின் கண்களுக்கு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.
இஸ்லாமியர்களுக்கு எதிரான உலகத்தின் பார்வைக்குள் அது அகப்பட்டு இருப்பதாக விமர்சனங்கள் உண்டு. காசா மீதான படுகொலைக் களத்தில் உலகில் உள்ள எல்லா ஏகாதிபத்திய சக்திகளும் பங்கெடுத்துள்ளன.
இக்கட்டுரையும் 21 ஆம் நூற்றாண்டு உலக தேசிய இனங்களைப் பொறுத்து முன்வைத்து வரும் புதிய தீர்வைப் பற்றிய உரையாடலாக உள்ளது.
மேலும் அழித்தொழிப்போம். வெற்றி நிச்சயம் என்ற புரிதலையும் கொண்டதாக உள்ளது. அத்தகைய Gideon’s Chariot தாக்குதலில் உள்ளார்ந்த அடிப்படையில் 1948 ஆம் ஆண்டு இதே மே மாதகாலப்பகுதிகள் பாலஸ்தீனரது குடியிருப்பு மீது Gideon’s Chariot; தாக்குதல் ஒன்றை யூத அரசாங்கங்கள் மேற்கொண்டிருந்தன.
அத்தகைய தாக்குதலுக்கு பெயரிட்டுள்ள நெதன்யாகு அரசாங்கம் மீண்டும் ஒர் பாலஸ்தீனரை அழிப்பதற்கான போரை தொடங்கி இருக்கிறார்.
இஸ்ரேலியப் பிரதமர் குறிப்பிடுவது போல் இத் தாக்குதல் யூத பணயக் கைதிகளை மீட்டெடுப்பதுடன் ஹமாஸ் பயங்கரவாதிகளை அழிப்பதுமென்ற இலக்கை கடந்து அந்நிலத்திலிருந்து வெளியேற மறுக்கும் பாலஸ்தீனர்களை கொன்றொழித்து அந்த நிலத்தை கைப்பற்றுவதே நோக்கமாகும்.
அத்தகைய நோக்கத்தின் பங்குதாரராக அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ட்ரம்பும் காணப்படுகிறார்.
அதனை அவரே சூழுரைத்துள்ளார். காசா நிலப்பரப்பை சுற்றுலா பயணிகளின் நகரமாக மாற்றுவேன் என்ற பிரகடனத்தோடு இப்போரை வழிமொழிந்து உள்ளார்.
இங்கு நிகழும் இனப்படுகொலையின் பங்குதாரராக அமெரிக்காவும் ஐரோப்பியர்களும் இருக்கின்றனர். அவர்களுடைய தாராளமுகமும் ஜனநாயக முகமும் இனப்படுகொலையின் வடிவங்களாகவே காணப்படுகின்றன. இதனை விரிவாக விளங்குவது அவசியமானது.
அங்கு அமெரிக்க ஜனாதிபதி உடன் உரையாடுகிற போது ரொனால்ட் ட்ரம்ப் பெரும் குற்றச்சாட்டுகளை தென்னாபிரிக்க ஜனாதிபதி மீது முன்வைத்தார்.
வெள்ளையின விவசாயிகளை கறுப்பர்கள் படுகொலை செய்வதாகவும் அதனை தென்னாபிரிக்க அரசாங்கம் தடுக்கவில்லை என்றும் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
அதனை மறுத்துரைத்த தென்னாபிரிக்க ஜனாதிபதி வெள்ளையின விவசாய அமைச்சரையும் வெள்ளை இன மக்களின் பாதுகாப்பையும் தமது அரசாங்கம் பேணி வருகிறது என்று குறிப்பிட்டு குற்றச்சாட்டை மறுத்துரைதார்.
இங்கு விடயம் வெள்ளையர்கள் கொல்லப்படுவது இனப்படுகொலை என கண்டுகொள்ளும் ட்ரம்ப் தான் பாலஸ்தீனர்களால் கொல்லப்படும் போது அமெரிக்க அரசின் அனுசரணையால் பாதுகாக்கப்பட்டதை மறந்துள்ளார்.
அவ்வாறு அப்பாவி மக்கள் கொல்லப்படுகின்ற போதும் இனப்படுகொலை என்பதை ஏற்றுக் கொள்ளாமல் அதனை பார்த்துக் கொண்டிருக்கிறார்.
இது வெள்ளையர்களை இந்த உலகத்தின் முதன்மையானவர்கள் என்பதையும் அவர்கள் கொல்லப்படுவது இனப்படுகொலை என்பதையும் வரையறுத்து வைத்திருக்கின்றது. அத்தகைய அரசுகளும் ஆட்சியாளர்களும் மேற்குலகத்தில் காணப்படுகின்றனர். இது ட்ரம்ப்புக்கும் அமெரிக்கர்களுக்கும் மட்டுமல்ல ஐரோப்பிய வெள்ளை இனத்தவரின் வடிவமாகவே உள்ளது.
சீனர்கள், ரஷ்யர்கள் உட்பட எல்லோருமே இப் படுகொலையை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். உணவை ஓர் ஆயுதமாக பயன்படுத்தும் இஸரேலின் அணுகுமுறையை ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, பிரித்தானியா போன்ற நாடுகளும் அதன் தலைவர்களும் கண்டித்திருக்கிறார்கள் என்ற ஒரு செய்தி வெளியாகி உள்ளது.
அத்தகைய கண்டனத்துக்கு முன்னர் இஸ்ரேலிய அரசாங்கத்துக்கு பாதுகாப்பு சபையிலும் இராணுவ ஆயுத தளவாட ரீதியிலும் பாரிய பங்களிப்பை வழங்கியவர்கள் என்பதை மறுக்க முடியாது.
அத்தகைய ஐரோப்பிய நாடுகள் போரை நிகழ்த்துவதற்காக ஆயுதங்களையும் இராணுவ பலத்தையும் வழங்கிவிட்டு உணவுக்கு அந்த மக்கள் கையேந்தும் போது அதற்கான ஆதரவை தாம் தெரிவிப்பதாக நியாயம் கற்பிக்க முயற்சிக்கின்றார்.
பாதகமான, துரோகத்தனமான சர்வாதிகாரத்தனமான அணுகுமுறைகளை அரங்கேற்றிவிட்டு அதற்கு நியாயம் கற்பிக்க தாராள ஜனநாயக சக்திகள் என்ற தம்மை அழைத்துக் கொள்பவர்கள் முயற்சிக்கின்றார்கள்.
இந்த அரசுகளே இஸ்ரேலிய அரசை, அதன் தாக்குதலை, அதன் இனப்படுகொலையை அங்கீகரித்துக் கொண்டிருக்கின்றன.
இந்நாடுகளே இனப்படுகொலையின் செயல்பாட்டை தூண்டின. ஹமாஸ் மேற்கொண்டது இனப்படு கொலையானால் இஸ்ரேல் மேற்கொள்வதும் இனப்படுகொலையே.
அதனையே மேற்குலக நாடுகளும் மேற்கொண்டு வருகின்றன. ஹமாஸ் அமைப்பை விட பல மடங்கு அதிகமான உத்திகளோடு இஸ்ரேல் இனப்படுகொலையை மேற்கொள்கிறது.
அதற்கு ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் பங்காற்றி வருகின்றன. அரசியல் இலக்கணம் என்ற நூலை எழுதிய ஹரோல் லக்ஸ்சியின் வார்த்தைகளே நினைவுக்கு வருகிறது.
அதாவது சர்வதேசத்திடம் நியாயாதிக்கத்தையோ நீதியையோ எதிர்பார்க்காதே என்பதாகும். உலகில் உள்ள ஒவ்வொரு நாடும் தமது நலனுக்கு ஏற்ற வகையில் அரசுகளையும் அரசு இயந்திரத்தையும் கையாண்டு வருகின்றன.
உலகம் ஒழுங்கு மாறுகிறது என்றும் அதில் ஒரு புதிய வடிவமாக சீனாவின் நூற்றாண்டு எழுச்சி பெறுகிறது என்றும் அமெரிக்க ஊடகங்கள் உரையாடுகின்றன. அத்தகைய சீனர்களும் ரஷ்யர்களும், இந்தியர்களும் காசாவில் அரங்கேறும் இனப்படுகொலையை பார்த்துக்கொண்டே இருக்கின்றனர்.
காசா மீதானப் போர் உலக வரலாற்றில் இனப்படுகொலை சார்ந்து அரங்கேற்றப்பட்ட மிகப் பெரிய சம்பவமாகவே உலக வரலாறு முழுவதும் பதியப் போகிறார்கள்.
ஐக்கிய நாடு சபையும், பாதுகாப்பு சபையும் நியாயாதிக்க மன்றங்களும் பார்த்துக் கொண்டிருக்கின்றபோது ஒரு இனத்தின் மீது ஒரு அரசு கண்மூடித்தனமான அழிவுகளையும் சிதைவுகளையும் ஏற்படுத்தி வருகிறது.
அதனை தடுத்து நிறுத்துவதற்குரிய வலுவிருந்தும் உலகம் அதனை மேற்கொள்வதற்கு தயாராக இல்லாதுள்ளது.
சர்வதேச சட்டங்களும் மனித உரிமை சட்டங்களும் பெண்கள், சிறுவர் உரிமை சட்டங்கள் உலகம் வலுமிக்கசக்திகள் அல்லது ஏகாதிபத்திய சக்திகளின் நலன் பேணுவதற்காக வைத்திருக்கும் தந்திரக் குறிப்புகள் மட்டுமே அல்லது வரைபுகள் மட்டுமே.
இதனால் எத்தகைய மாற்றத்தையும் உலக ஏகாதிபத்தியங்களில் இயல்புகளில் ஏற்படுத்த முடியாது.
அடக்குமுறையும், ஒடுக்கு முறையும், தேசிய இனங்கள் மீது ஒரே வடிவத்தில் அரங்கேற்றப்படுகின்றன,
இஸ்ரேலிய அரசு 1947 ஆம் ஆண்டிலிருந்து மேற்கொண்ட அனைத்து தாக்குதல்களிலும் கொல்லப்பட்ட ஆராபியர்கள் பாலஸ்தீனர்களின் அழிவுகளுக்கு தாராள ஜனநாயக அரசுகளும் அதன் ஆட்சியாளர்களும் பொறுப்புடையவர்களே.
இது தனித்து யூத அரசு மேற்கொண்டது என்று குறிப்பிட்ட விட்டு செல்ல முடியாது. மாறாக உலகில் உள்ள வெள்ளையின ஐரோப்பியர்கள் தமது நலனுக்குள்; சிறுபான்மை தேசியங்களை ஆதிக்கம் செய்ய வேண்டும் என்பதில் கரிசனை கொண்டுள்ள செயற்பாடாகவே உள்ளது.
எனவே காசா மீதான தாக்குதல் நிறுத்தப்படுவது மிக கடினமானது டொனால்ட் ட்ரம்ப் உலகில் நடக்கும் போர்களை முடிவுக்கு கொண்டு வரப் போவதாக தேர்தல் காலத்தில் இருந்து இன்று வரை பிரஸ்தாபித்து வருகின்றார்.
அவரது தேசத்தின் ஆயுதங்களும் ஒத்துழைப்புக்களுமே இஸ்ரேல் பாலஸ்தீனர்கள் மீதான தாக்குதலை மேற்கொள்ள அடிப்படையாகும்.
இது அவரது போலியான சமாதான உரையாடல். என்பது ஏகாதிபத்தியத்தின் பிந்திய வடிவங்களில் ஒன்றாக மாறியுள்ளது.
காசா மக்கள் முழுமையாக அழிக்கப்பட்டு நிலப்பரப்பை முழுமையாக யூதர்கள்- அமெரிக்கர்கள்- ஐரோப்பியர்கள் கைப்பற்றும் நிலை ஒன்றை தோற்றுவிக்கப் போகின்றது. அதனை நோக்கி உலகம் பயணிக்கின்றது.
இதனை நோக்கியே உலகத்தின் இருப்பு நகருகிறது. இதிலிருந்து உலகத்தை மீட்பது கடினமானது. தேசிய இனங்கள் காணாமல் போவது கரைந்து போவதும் வரலாற்றின் நியதியாக மாறிக் கொண்டிருக்கின்றது.
இப்போரில் சில ஆய்வாளர்கள் வியட்நம் போருடன் ஒப்பீடு செய்ய முயற்சிக்கின்றனர். அமெரிக்கா, வியட்நாம் எப்படி வீழ்ச்சி கண்டதோ அதேபோன்று இஸ்ரேல் வீழ்ச்சி அடையும் என்று கணக்கு வகுத்துள்ளார்.
ஆனால் நடைமுறை அத்தகைய முக்கியத்துவத்தை கொடுக்குமா என்ற சந்தேகத்தை தர ஆரம்பித்திருக்கின்றது.
அதன் ஊடாக ஏற்படக் கூடியமாற்றங்களை முன் கொண்டு செல்கின்ற தேசங்களின் எண்ணமே எழுச்சி பெறவில்லை. அமெரிக்காவுக்கு பதிலாகவும் மேற்குக்கு பதிலாகவும் சீனாவின் நூற்றாண்டு அமைகின்றது. அதுவே 21ம் நூற்றாண்டில் தேசிய இனங்களின் பிரச்சினைக்கு தீர்வாக அமையவுள்ளது.