பஸ்ஸின் மிதி பலகையில் இருந்து தவறி விழுந்த நிலையில், வைத்தியசாலை சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் புலோப்பளை, பளையைச் சேர்ந்த அன்ரனி அருள்தாஸ் நிதுராஜ் (வயது 26) என்ற இளைஞராவார்.

மேற்படி இளைஞர் கடந்த 23 ஆம் திகதி காலை மட்டக்களப்பு நோக்கி சென்று கொண்டிருந்த இ.போ.ச பாஸ்ஸின் மிதி பலகையில் நின்று பயணித்துள்ளார். இதன் போது பயணிகள் ஏறும் போது அவர் இறங்கி ஏறியுள்ளார்.

இந்நிலையில், கரந்தாய் பகுதியில் இறங்கிவிட்டு ஏறும்போது பஸ் வண்டியிலிருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். இதனை அடுத்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு இருந்த நிலையில் நேற்று முந்தினம் செவ்வாய்க்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார். சாட்சிகளை பளைப் பொலிஸார் நெறிப்படுத்தினர். (a)

Share.
Leave A Reply

Exit mobile version