மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் பெருந் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று(31) ஆரம்பமானது. திருக்கோணேச்சரம் ஆலயத்தில் இருந்து பாரம்பரிய முறையில் எடுத்து வரப்பட்டு தீர்த்தம் மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ததைத் தொடர்ந்து கொடியேற்றம் இடம் பெற்றது.

தொடர்ந்து உற்சவ மூர்த்திகளுக்கு வசந்த மண்டபத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

அதனை தொடர்ந்து உற்சவ மூர்த்திகள் கொடி தம்பத்திற்கு முன் எழுந்தருளிய தை அடுத்து கொடி தம்பத்திற்கு விசேட பூஜைகள் இடம்பெற்றன.

சுப நேரத்தில் ஆலய பிரதம குருக்கள் தலைமையில் கொடியேற்றம் இடம்பெற்றது.அதனைத் தொடர்ந்து விசேட பூஜைகள் இடம்பெற்று உற்சவ மூர்த்திகள் உள் வீதி உழா வந்தனர்.
தொடர்ந்து எதிர் வரும் 08.06.2025 ஞாயிறுக்கிழை திருத்தேர் திருவிழாவும் 09.06.2025 தீர்த்தத்திருவிழாவும் இடம்பெறவுள்ளமை குறிபிடதக்கது

Share.
Leave A Reply

Exit mobile version