தாய்லாந்தில் இலங்கை சுற்றுலாப் பயணியான 54 வயதான சோமபால மீது திருநங்கை (பெண்) ஒருவர் செருப்புகளால் தாக்குதல் நடத்தியுள்ளார்.
தாய்லாந்தின் பட்டாயா கடற்கரை வீதியில் இந்தச் சம்பவம் நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
54 வயதான இலங்கைருக்கு சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், இரு தரப்பினரும் மேலதிக விசாரணைக்காக முவாங் பட்டாயா பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
குற்றம் சாட்டப்பட்ட 29 வயது திருநங்கை பெண் மைந்த்ரான் புரான் என்பவர் கூறுகையில், தனது ஹை ஹீல்ட் செருப்பால் இலங்கையரை தலையில் பலமுறை அடித்ததாக ஒப்புக் கொண்டார்.
அவரது வாக்குமூலத்தின்படி, இலங்கை சுற்றுலாப் பயணி சோமபால திருநங்கையை அணுகியுள்ளார். இதன்போது தனது சேவைக் கட்டணத்தை திருநங்கை கூறி தொட அனுமதித்துள்ளார்.