“கர்நாடக தலைநகர் பெங்களூரு போக்குவரத்து நெரிசலுக்கு பெயர் பெற்றது. இந்நிலையில் பெல்லந்தூரில் தனது ஸ்கூட்டர் மீது ஆட்டோ உரசியதால் வடமாநில இளம்பெண் ஆத்திரமடைந்தார்.

இதனையடுத்து, அவர், ஆட்டோ டிரைவரை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது இளம்பெண் தனது செருப்பை கழட்டி ஆட்டோ டிரைவரை தாக்கினார். மேலும் இந்தி மொழியில் அந்த ஆட்டோ டிரைவரை இளம்பெண் திட்டியதாக கூறப்படுகிறது.

இதை ஆட்டோ டிரைவரின் பக்கத்தில் இருந்தவர்கள் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவியது.,

இந்த விவகாரம் தொடர்பாக ஆட்டோ டிரைவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை விசாரித்த போலீசார் இந்த விவாகரத்தில் வடமாநில பெண் மீது தான் தவறு உள்ளது என்பதை கண்டுபிடித்து அவரை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

இதனையடுத்து வடமாநில பெண்ணும் அவரது கணவரும் ஆட்டோ டிரைவரின் காலில் விழுந்து மன்னிப்பு கோரினர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

 

Share.
Leave A Reply

Exit mobile version