வவுனியா காத்தார்சின்னக்குளத்தில் உள்ள வீடொன்றிலிருந்து இரத்தக்கறைகளுடன் இளம் தந்தை ஒருவரின் சடலத்தை பொலிஸார் இன்று புதன்கிழமை (04) மீட்டுள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டு, விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
வவுனியா காத்தார்சின்னக்குளத்தைச் சேர்ந்த 24 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இது கொலையா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் நேற்று செவ்வாய்க்கிழமை (03) மாலை இளைஞர் குழுவொன்றுடன் மோதலில் ஈடுபட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுத்துவரும் வவுனியா குற்றப்பிரிவு பொலிஸார் சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு இளைஞர்களிடம் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.