“அமெரிக்க அரசியலையும், உலகப் பிரபலங்களையும் உலுக்கி வரும் ‘எப்ஸ்டீன் கோப்புகள்’ விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.
உலக பணக்காரரும், எக்ஸ் தளத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க், முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் பெயர் இந்தக் கோப்புகளில் இருப்பதாகவும், அதனால்தான் அவை இதுவரை வெளியிடப்படவில்லை என்றும் எக்ஸ் தளத்தில் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
ஆனால் இன்று (ஜூன் 7) அந்த பதிவை எலான் மஸ்க் நீக்கியுள்ளார். இந்த குற்றச்சாட்டுகள் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், ‘எப்ஸ்டீன் கோப்புகள்’ குறித்த கேள்விகள் வலுத்துள்ளன
ஆனால், அவரது ஆடம்பர வாழ்க்கை முறைக்கும், சமூக அந்தஸ்துக்கும் பின்னால், கிரிமினல் உலகமே இருந்தது.
2000-களின் முற்பகுதியிலிருந்து, எப்ஸ்டீன் மீது இளம் சிறுமிகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியது, கடத்தியது போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அவருக்குச் சொந்தமான ‘லிட்டில் செயிண்ட் ஜேம்ஸ்’ என்ற கரீபியன் தீவில், பல முக்கிய பிரமுகர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் ஆகியோரை அழைத்து வந்து,
அங்கு பாலியல் ரீதியான வன்முறைகளில் ஈடுபட்டதாக வழக்குகள் பதிவாகின. 2008-ல் எப்ஸ்டீனுக்கு மிகக் குறுகிய காலம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
பின்னர், 2019-ல் மேலும் கடுமையான பாலியல் கடத்தல் குற்றச்சாட்டுகளுடன் மீண்டும் அவர் கைது செய்யப்பட்டார்.
ஆனால், வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்பே, அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் நியூயார்க் சிறையில் மர்மமான முறையில் இறந்துபோனார்.
அவரது மரணம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது, அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொல்லப்பட்டாரா என்பது இன்று வரை ஒரு கேள்விக் குறியாகவே உள்ளது.
இந்த கோப்புகளில் பல உயர்மட்ட அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், பிரபல கலைஞர்கள் மற்றும் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக நீண்டகாலமாகவே சந்தேகங்கள் நிலவி வருகின்றன.
இந்த கோப்புகள் வெளியானால், பலரின் இமேஜ் அடியோடு சரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில்தான், எலான் மஸ்க் தனது எக்ஸ் தளத்தில், \”உண்மையைச் சொல்கிறேன்… டிரம்ப் எப்ஸ்டீன் கோப்புகளில் இருக்கிறார்.
அதனால்தான் அந்த ஆவணங்கள் பொதுவில் பகிரப்படவில்லை.இதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்,
எதிர்காலத்தில் உண்மை வெளிவரும்” என்று நேரடியாக குற்றம்சாட்டினார்.
ஆனால் அந்த பதிவை அவர் நீக்கியுள்ளது மேலும் சந்தேகங்களேயே எழுப்பியுள்ளது. ஏற்கவே பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகளில் டிரம்ப் நீதிமன்ற வழக்குகளை எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, எலான் மஸ்கின் இந்தக் குற்றச்சாட்டுகளை டிரம்ப் நிராகரித்துள்ளார்.
“மஸ்க் ஒரு பைத்தியக்காரன்” என்றும், எப்ஸ்டீனின் சட்டவிரோத நடவடிக்கைகளுடன் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும் டிரம்ப் தெரிவித்தார். எப்ஸ்டீன் வழக்கு விசாரணைக்கு அதிகாரிகளுக்கு தான் உதவியதாகவும் டிரம்ப் கூறினார். “,