காசாவில் உண்ண உணவில்லாமல், உணவு கேட்டு மண்ணை உண்ணும் சிறுவனின் வீடியோ காண்போரை கண்கலங்க வைக்கிறது.

தோட்டாக்களாக துளைக்கின்றன. இஸ்ரேல் தாக்குதலால் உருக்குலைந்து போன காஸாவில்தான் இந்நிலைமை…. உணவில்லை …

காசாவில் உண்ண உணவில்லாமல், உணவு கேட்டு மண்ணை உண்ணும் சிறுவனின் வீடியோ காண்போரை கண்கலங்க வைக்கிறது. அந்த வீடியோவில், “ மண்ணை உண்ணும் நிலைக்கு கொண்டு வந்துவிட்டீர்கள். இது சரியே இல்லை…

சிறிதேனும் இரக்கம் காட்டுங்கள்… பசியாற மாவுப்பொருள் வேண்டும்… ஒவ்வொரு நாளும் உதவிப்பொருள்கள் கொண்டுவந்த டிரக்கை நோக்கி ஓடுகிறோம்… உணவுதான் கிடைப்பதில்லை…

இது முறையா, சிறிய ரொட்டித்துண்டின் விலை இந்திய நாணய மதிப்பில் 570 ரூபாய்க்கும் அதிகம்… என்று மாறும் இந்த நிலை.” என்று தெரிவித்து மண்ணை உண்கிறார்.

போரி கோர முகத்தால் பாதிக்கப்படுவது அடிப்படை தேவைகளை எல்லாம் இழந்து உண்ண உணவும், உடுத்த உடையும், இருக்க இருப்பிடமும் இல்லாமல் தவிக்கும் அப்பாவி மக்கள்தான் என்பதை இந்த காணொளி நமக்கு உணர்த்துகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version