அனிச்சங்குளம் பகுதியில் உணவருந்தி கொண்டிருந்தபோது மண் வெட்டியால் தாக்கப்பட்ட சம்பவத்தில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் செல்வபுரம் வடக்கு, வவுனிக் குளத்தைச் சேர்ந்த கதிரவேற்பிள்ளை கண்ணதாசன் (வயது 56) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.

அனிச்சம் குளத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் காவலாளியாக உள்ள மேற்படி நபர்
கடந்த மாதம் 10 ஆம் திகதி மூன்று பேருக்கு உணவெடுத்துக் கொண்டு சென்று அப்பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மூவரும் உணவருந்தியுள்ளனர்.

இதன்போது ஏற்பட்ட கருத்து முரண்பாட்டில் மூவரில் ஒருவர் மண் வெட்டியால் மேற்படி நபரை தாக்கியுள்ளார். இதில் அவர் படுகாயமடைந்தார். இதனை அடுத்து தாக்கிய நபர் நெட்டங்கண்டால் பொலிஸில் சரணடைந்தார். மற்றையவர் ஓடி ஒழிந்துள்ளார்.

இதில் படுகாயம் அடைந்தவர் மல்லாவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர்
கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு இருந்த நிலையில் நேற்று (20) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இம் மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார். சாட்சிகளை நெட்டாங்கண்டல் பொலிஸார் நெறிப்படுத்தினர்.

Share.
Leave A Reply

Exit mobile version