“தமிழ் திரை உலகில் பிரபல நடிகராக இருந்து வரும் ரோஜா கூட்டம் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை செய்யும் கும்பலுடன் தொடர்பில் இருந்த குற்றத்திற்காக கைது செய்யப் பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கொகைன் மற்றும் மெத்த பெட்டமைன் போதைப்பொருட்களை இவர் பயன்படுத்தி இருப்பது தெரிய வந்துள்ளது.

இதைத் தொடர்ந்து இவரது பின்னணியில் இருப்பவர்களை பிடிப்பதற்கு போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கி இருக்கிறார்கள்.

இந்த இரண்டு போதைப்பொருள்களும் சென்னை மாநகரில் அதிக அளவில் புழக்கத்தில் இருக்கும் அதிர்ச்சி தகவலும் வெளியாகி இருக்கிறது.

சென்னையில் வார இறுதி நாட்களில் பண்ணை வீடுகள் மற்றும் நடன அரங்குகளில் நடைபெறும் விருந்துகளில் மதுவுடன் கொகைன் மற்றும் மெத்த பெட்டமைன் போதைப்பொருட்கள் இரண்டுமே சர்வ சாதாரணமாக புழக்கத்தில் இருக்கும் அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.

இளைஞர்களின் உடல் நலனை பாதிக்கும் வகையில் தடை செய்யப்பட்ட இந்த இரண்டு போதைப்பொருட்களும் சென்னை மாநகரத்தில் எப்படி ஊடுருவி வருகின்றன?

அவற்றின் பின்னணி என்ன என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் கிடைத்துள்ளன. அதன் விவரம் வருமாறு:-

அமெரிக்காவை பூர்வீகமாக கொண்ட கொகோ என்கிற தாவரத்தில் இருந்துதான் கொக்கையின் போதைப்பொருள் தயாரிக்கப்படுகிறது.

கொக்கைன் இலைகளை பறித்து நன்றாக காய வைத்து பின்னர் அதனை பொடியாக்கி கொக்கைன் போதைப்பொருளாக பயன்படுத்துகிறார்கள்.

அமெரிக்கா, ஆப்பிரிக்க நாடுகளின் பழங்குடி மக்கள் இதனை அதிக அளவில் தொடக்க காலத்தில் மயக்க மருந்துக்காக பயன்படுத்தி வந்துள்ளனர்.

இது நாளடை வில் போதைப்பொருட்களாக பயன்படுத்த தொடங்கியதும் பல்வேறு நாடுகளும் தடை விதித்தன.

இருப்பினும் தடையை மீறி கொக்கையின் போதைப்பொருள் சர்வதேச அளவில் மிகப்பெரிய கடத்தல் சந்தையாகவே மாறி இருக்கிறது.

அந்த வகையில் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து போதைப் பொருட்கள் தமிழகத்துக்கு கடத்தி வரப்படுவது வாடிக்கையாகவே இருந்து வருகிறது.

அந்த வகையில் நைஜீரியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து சென்னைக்கு சுற்றுலா விசாக்களில் வரும் வாலி ர்கள் கொகைன் போதைப்பொருளை கடத்தி வந்து இங்குள்ள போதைப்பொருள் விற்பனையாளர்கள் மூலமாக படித்த இளைஞர்கள் மற்றும் திரைப்பிரபலங்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளனர்.

இந்த கொக்கைன் போதைப்பொருளை மூன்று விதமாக பயன்படுத்துகிறார்கள். பவுடராக மூக்கு வழியாக நுகர்ந்தும், பல் ஈறுகளுக்கு இடையில் வைத்தும் போதை ஏற்றுகிறார்கள்.

அதே நேரத்தில் கொகைனை ஒரு சில்வர் பேப்பரில் வைத்து அதன் கீழே லைட்டரில் தீயை காட்டி அதன் மூலமாக வெளியேறும் புகையை நுகர்ந்தும் கொக்கைன் போதையை அனுபவிக்கிறார்கள்.

பவுடர் வடிவிலான கொகைன் வெள்ளைப் பொடி போன்ற தோற்றத்தில் இருக்கும். இதனை தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் உடலில் செலுத்துவார்கள்.

அடுத்ததாக புகைக்கக்கூடிய வகையில் சற்று திடப்பொருளாக கொக்கையினை மாற்றியும் பயன்படுத்துகிறார்கள் பேக்கிங் சோடா அல்லது அம்மோனியாவுடன் கலந்து இதனை உருவாக்குகிறார்கள்.

இதனை சூடுபடுத்தி புகையாக உறிஞ்சுவதன் ரத்தத்தில் கொகைன் விரைவாக கலந்து அதிக போதையை ஏற்படுத்துகிறது.

இதேபோன்று சில ரசாயனங்களை கொண்டு வீடுகளிலேயே தயாரிக்கப்படும் மெத்த பெட்டமைன் போதைப்பொருளும் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த இரண்டு போதைப்பொருட்களையும் தான் நடிகர் ஸ்ரீகாந்த் அதிக அளவில் வாங்கி பயன்படுத்தி இருக்கிறார்.

இவரைப் போன்று பிரபலங்கள் பலரும் கொக்கைன் மற்றும் மெத்த பெட்டமைன் போதைப்பொருட்களை அதிக அளவில் பயன்படுத்தி வரும் அதிர்ச்சி தகவல்களும் வெளியாகி உள்ளன.

இன்றைய இளைஞர்கள் மத்தியில் தவறான பழக்க வழக்கங்கள் அதிகமாகவே இருந்து வருகிறது.

அந்த வகையில் வார இறுதி நாட்களில் அவர்கள் பாலியல் அழகிகளை தேடிச் சென்று இன்பம் அனுபவிப்பதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்கள்.

அதே நேரத்தில் அந்த விஷயத்தில் மிகவும் வீக்கான சினிமா பிரபலங்கள் பலரும் கொக்கையின் மற்றும் மெத்த பெட்டமைன் போதைப்பொருட்களை நீண்ட நேர பாலியல் இன்பத்துக்காகவும் அதிக அளவில் பயன்படுத்தி வருவதாகவும் பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளன.

ஸ்ரீகாந்த்தை தொடர்ந்து மேலும் பல திரைபிரபலங்கள் இந்த வழக்கில் சிக்கும்போது போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையின் பின்னணியில் மேலும் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.”,

Share.
Leave A Reply

Exit mobile version