தனியார் பஸ்ஸில் பயணித்த இளம் பெண் ஒருவரின் கால்களை கையடக்கத் தொலைபேசி மூலம் காணொளி எடுத்தமை தொடர்பான வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்ட இளைஞனுக்கு 20 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட கடூழிய சிறைத் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேலதிக நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை ( 27) தீர்ப்பளித்தது.

இதேவேளை, குற்றம் சாட்டப்பட்டவருக்கு 1,500 ரூபாய் தண்டப்பணமும், பாதிக்கப்பட்டவருக்கு 50,000 ரூபாய் நஷ்ட ஈடு வழங்குமாறும் கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனவெல உத்தரவிட்டார்.

பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்கப்படாவிட்டால், குற்றம் சாட்டப்பட்ட தெமட்டகொடையைச் சேர்ந்தவருக்கு மேலதிமாக ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கவும் உத்தரவிடப்பட்டது.

இந்த சம்பவம், ​பொரளை பகுதியில் கடந்த ஆண்டு இடம்பெற்றது., நீண்ட சட்ட நடைமுறைக்கு வழிவகுத்தது.

இதேபோன்ற தண்டனை தொந்தரவு செய்யும் ஏனையவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என பொலிஸார் நீதிமன்றத்தைக் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version