மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற தாயார் கீழே மயங்கிய வீழ்ந்து நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.

ஈச்சமோட்டை வீதி, யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த ஜீவராசா மேரி தெரேசா (வயது 52) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் கடந்த 19ஆம் திகதி ஊர்காவற்றுறையில் உள்ள தனது வீட்டைப் பார்ப்பதற்கு மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். இதன்போது ஊர்காவற்றுறை வைத்தியசாலைக்கு முன்பாக இடது பக்கமாக ஒருவர் சைக்கிளில் வந்துள்ளார்.

இந்நிலையில் திடீரென பிரேக்கை அழுத்திய வேளை மோட்டார் சைக்கிளில் பின்னாலிருந்த மேற்படி பெண் திடீரென கீழே வீழ்ந்து மயங்கியுள்ளார்.

அவர் பின்னர் ஊர்காவற்றுறைவைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ். போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்றுக் காலை உயிரிழந்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version