தென் கொரியாவில் சுரங்கப்பாதையில் ஓடும் ரெயிலுக்குள் தீவைத்த 67 வயது வோன் என்ற நபர் கைது செய்யப்டட்டார்.

கடந்த மே 31 அன்று ஹான் நதிக்கு அடியில் சுரங்கப்பாதை வழியாகச் சென்று கொண்டிருந்தபோது ரெயிலுக்கு தீ வைக்கப்பட்டது.

ரெயில் உள்ளே பெட்ரோல் ஊற்றி, தீ வைத்தார். தீ விபத்தில் 22 பயணிகள் புகையை சுவாசித்து மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

வோன்-உம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த தீ விபத்தில் 330 மில்லியன் வோன் சொத்து சேதம் ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் தற்போது வேகமாக பரவி வருகிறது. மனைவியுடன் விவாகரத்து வழக்கின் முடிவில் ஏற்பட்ட விரக்தியால் வோன் இந்த செயலைச் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். “,

Share.
Leave A Reply

Exit mobile version