இந்த ஆண்டின் ஜூன் மாதத்தில் மாத்திரம் 138,241 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் ஜூன் மாதத்தில் வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது இது 21.8% அதிகமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் ஜூன் மாதத்தில் இந்தியாவிலிருந்தே அதிக சுற்றுலாப் பயணிகள் வந்ததாகவும் அந்த எண்ணிக்கை 37,934 ஆக பதிவாகியுள்ளதுடன் இது 27.4% வீதம் என குறிப்பிடப்படுகின்றது.

மேலும், ஜூன் மாதத்தில் ஐக்கிய இராச்சியத்திலிருந்து 11,628 பேரும் சீனாவிலிருந்து 8,804 பேரும் அவுஸ்திரேலியாவிலிருந்து 7,299 பேரும் பாகிஸ்தானில் இருந்து 6,833 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

அதன்படி, 2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,168,044 ஆக உள்ளது.

அவர்களில், 241,994 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள், 112,312 பேர் ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள் மற்றும் 107,902 பேர் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள் என்று சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version