காசாவில் வீதியோர குண்டுவெடிப்பில் ஐந்து இஸ்ரேலிய படையினர் கொல்லப்பட்;டுள்ளனர்.

காசாவின் வடபகுதியில் பெய்ட்ஹனோன் பகுதியில் படையினர் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவேளை இரண்டுகுண்டுகள் வெடிக்கவைக்கப்பட்டதாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்போது ஐந்து படையினர் கொல்லப்பட்டதுடன் 14 பேர் காயமடைந்துள்ளனர்.

இதேவேளை இஸ்ரேலிய படையினர் தாக்கப்பட்டதால் சமாதான பேச்சுவார்த்தைகளை உடனடியாக நிறுத்தவேண்டும் என இஸ்ரேலின் வலதுசாரி அமைச்சர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நாங்கள் எங்கள் படையினரை கொலை செய்பவர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடக்கூடாது,அவர்களை துண்டுதுண்டாக்கவேண்டும் அல்லது பட்டினி போடவேண்டும் அவர்களிற்கு ஒக்சிசன் வழங்கும் மனிதாபிமான உதவிகளை வழங்க கூடாது என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version