செம்மணி – சித்துபாத்தி மனித புதைகுழியிலிருந்து இதுவரை 63 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு அதில் 54 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி வழக்கின் இரண்டாம் கட்ட அகழ்வுப்பணியின் 14 ஆவது நாளான இன்று யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்றது.

குறித்த அகழ்வின் போது, இன்று (ஜூலை 09) ஒரு சிறுமியின் ஆடைகள் , இறப்பர் செருப்பு மற்றும் பிற பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இரண்டாம் கட்ட அகழ்வு நாளை தற்காலிகமாக நிறைவடைய உள்ள நிலையில், விரைவில் அகழ்வுப் பணிகள் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்க படுகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version