சென்னை: இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ படம் வெள்ளிக்கிழமை தியேட்டரில் வெளியானது.
இந்த படத்தில், ‘சிவராத்திரி தூக்கம் ஏது’ என்ற பாடல் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதுகுறித்து, வனிதா விஜயகுமார் அளித்த பேட்டியில், சோனி மியூசிக் நிறுவனத்திடம் தாங்கள் உரிமைகளை வாங்கினோம்.
தனது படம் மட்டுமல்லாமல் குட் பேட் அக்லி, மஞ்சும்மல் பாய்ஸ் உள்ளிட்ட பிற படங்களின் மீதும் இளையராஜா வழக்கு தொடர்ந்ததாகவும் அவர் கூறினார்.
நான் இளையராஜா வீட்டில் பூஜை செய்திருக்கிறேன். அவரது வீட்டு லாக்கர் சாவியை ஜீவா அம்மாவிடம் இருந்து வாங்கி, நகைகளை எடுத்து அம்மனுக்கு அணிவித்து பூஜை செய்து இருக்கிறேன்.
அந்த வீட்டிற்காக நான் அவ்வளவு உழைத்திருக்கிறேன். நான் அந்த குடும்பத்தில் ஒருத்தியாக இருந்தவள்.
இந்த வீட்டிற்கு மருமகளாகப் போக வேண்டியவள், அவ்வளவு தான் சொல்ல முடியும் என கண் கலங்கி பேசி இருந்தார்.
இதுகுறித்து பேசிய பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு பேசி உள்ளார்.
செய்யாறு பாலு: இளையராஜாவின் பாடல் எங்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறதோ, அங்கிருந்து அவருக்கு பணம் வந்து கொண்டே இருக்கிறது.
இளையராஜா அவர்கள் ஒரு ஞானி வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறார். அப்படி இருக்கும்போது, இந்தப் பாடலை அவர் விட்டுக் கொடுத்து இருக்கலாம் வனிதாவும் இந்த பாடலை அனுமதி வாங்கி தான் பயன்படுத்தி இருக்கிறார்.
அவரது வீட்டிற்கு சென்று இருக்கிறார், ஆசிர்வாதம் வாங்கிவிட்டு வாங்குகிறார். அப்படி இருக்கும் போது காபி ரைட்ஸ் தொடர்பாக இளையராஜா வழக்கு தொடர்வது ஏன்.
அஜித் நடித்த, குட் பேட் அக்லி படத்தில் இளையராஜாவின் பாடல் பயன்படுத்தப்பட்டது. அதற்கு ராயல் கேட்டு வழக்கு தொடர்ந்து இருந்தார்.
அது ஒரு மிகப்பெரிய கம்பெனி, அந்த நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்தது தவறு இல்லை. வனிதா தன்னுடைய சொந்த முயற்சியால், தானே தயாரிப்பாளராக இருந்து இந்த படத்தை எடுத்து முடித்து இருக்கிறார்.
இந்த படத்திற்காக சம்பாதித்த மொத்த பணத்தையும் போட்டு, படத்தை எடுத்து, படம் வெளியாவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே ப்ரோமோஷன் செய்து வருகிறார்.
இளையராஜா மருமகளா: அப்படி இருக்கும் போது, ஒரே ஒரு பாட்டு தானே இளைராஜா விட்டு கொடுத்து இருக்கக்கூடாதா, ஏன் இளையராஜா ஒரு வியாபாரியாக நடந்து கொள்கிறார் என்று தெரியவில்லை.
அந்த, மனவேதனையில் தான் வனிதா, அந்த வீட்டிற்கு மருமகளாகப் போக வேண்டியவள், கோவத்தில் இருக்கிறேன், தேவையில்லாத வெளியில் சொல்லிவிட்டால், பிரச்சனையாகி விடும் என்று சொல்லி கண்கலங்கி இருக்கிறார் என்றார்.
வனிதா சொன்னதைக் கேட்ட பலரும், என்னது.. இளையராஜா மருமகளா? நல்ல வேளை தப்பிச்சாரு என இணையத்தில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.