காசாவில் இஸ்ரேலிய படையினரின் டாங்கி குண்டுவெடிப்பொன்றில் சிக்கியதில் மூன்று படையினர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

19 முதல் 20 வயதுடையவர்களே கொல்லப்பட்டுள்ளனர் . படுகாயமடைந்த அதிகாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.காசாவின் வடபகுதி நகரனா ஜபாலியாவில் குண்டுவெடிப்பில் சிக்கிய டாங்கியில் இருந்த படையினரே கொல்லப்பட்டுள்ளனர்.

ஹமாஸ் தாக்குதல் காரணமாகவே டாங்கி வெடித்து சிதறியது என முதலில் கருதியதாக தெரிவித்துள்ள இஸ்ரேலிய இராணுவம் எனினும் டாங்கியின் சுழலும் பீரங்கிமேடைக்குள் தவறுதலாக எறிகணை வெடித்ததால் இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என கருதுவதாக தெரிவித்துள்ளது.401வது கவசவாகனப்பிரிவை சேர்ந்தவர்களே உயிரிழந்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version