– ஓவியர் ஒருவருக்கு காந்தி போஸ் கொடுத்த சந்தர்ப்பம் இதுவே

மகாத்மா காந்தி கடந்த 1931ஆம் ஆண்டு இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்ள இங்கிலாந்தின் லண்டனுக்குச் சென்ற போது அவரை பிரித்தானிய கலைஞர் கிளேர் லெய்டன் சந்தித்தார்.

அப்போது அவர் ஓவியம் வரைவதற்காக காந்தி போஸ் கொடுத்தார். இந்த ஓவியம் 1974 ஆம் ஆண்டு பொதுக்காட்சிக்கு வைக்கப்பட்டது.

அந்த ஒவியம் தற்போது ஏலத்தில் விடப்பட்டுள்ளது. போன்ஹாம்ஸில் நடந்த ஒன்லைன் ஏலத்தில் இந்த காந்தி ஓவியம் 152,800 பவுண்ஸ்களுக்கு (204,648 டொலருக்கு) விற்பனை ஆகியுள்ளது.

இதன் இலங்கை மதிப்பு ரூ. 6 கோடிக்கும் அதிகம் (இந்திய ரூ. 1.7 கோடி) என தெரிவிக்கப்படுகின்து.

இது நிர்ணயிக்கப்பட்ட விலையை காட்டிலும் 3 மடங்கிற்கு விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. மகாத்மா காந்தி தன் வாழ்நாளில் ஓவியர் ஒருவருக்கு போஸ் கொடுத்தது இந்த நிகழ்வு மட்டுமே என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version