முல்லைத்தீவு நகர் பகுதியில் உள்ள சின்னாற்றுக்குள் உயிரிழந்த நிலையில் சடலம் வியாழக்கிழமை (17) மீட்கப்பட்டுள்ளது.

சின்னாற்றுக்குள் உயிரிழந்தவரின் சடலம் நீரில் மிதந்துள்ளது. அதனையடுத்து சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதனை தொடர்ந்து முல்லைத்தீவு பொலிசார் சம்பவ இடத்திற்கு வருகைதந்து உடலத்தினை மீட்டுள்ளார்கள்.

குறித்த சம்பவத்தில் செல்வபுரம் பகுதியினை சேர்ந்த 54 அகவையுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Share.
Leave A Reply

Exit mobile version