உடலில் பெற்ரோலை ஊற்றி கொண்டு குடும்பத்தினரை அச்சுறுத்திய நபர் மீது தீ பற்றிக் கொண்டதில் கடுமை யான தீ காயங்களுக்குள்ளான நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் நயினாதீவு – 8ம் வட்டாரத்தை சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான செல்லத்துரை ஸ்ரீகிருஷ்ணா (வயது52) என்பவரே உயிரிழந்துள்ளார்.
கடந்த 17 ம் திகதி மதுபோதையில் வீட்டுக்குச் சென்றிருந்த அவர் மனைவி, பிள் ளைகளுடன் தகராறில் ஈடுபட்டது டன், தனக்கு தானே பெற்ரோலை ஊற்றிக்கொண்டு தீ வைக்கப்போவதாக மிரட்டியுள்ளார்.
ஒரு கட்டத்தில் தீப்பெட்டியை பற்றவைப்பதுபோல் மிரட்டிய போது தீப்பற்றி உடல் முழுவதும் எரிந்துள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்தவர் நயினாதீவு வைத்தி யசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சனிக்கிழ மை(19) அதிகாலை சிகிச்சை பல னின்றி உயிரிழந்துள்ளார்.
மரணம் தொடர்பில் யாழ்.போதனா வைத் தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரே ம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார். சாட்சியங்களை ஊர்காவற்றுறை பொலிசார் நெறிப்படுத்தினர்.