: “அமெரிக்காவில் டென்வர் சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை 07:49 மணிக்கு மியாமிக்கு அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் AA-3023, புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தது.

அப்போது தரையிறங்கும் கியர் பழுதடைந்ததால் டயர் தீப்பிடித்தது. இதனால் ஓடுபாதையில் அடர்த்தியான புகை கிளம்பியது. எச்சரிக்கையான விமானி உடனடியாக விமானத்தை நிறுத்தினார். விமானத்தில் இருந்த 173 பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

இந்தச் சம்பவத்தில் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version