இந்த ஆண்டில் இதுவரை நாட்டிற்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1.3 மில்லியனைத் தாண்டியுள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் சமீபத்திய புள்ளிவிபரங்களின்படி, 1,313,232 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாகக் குறிப்பிடுகின்றன.

இவர்களில் 269,780 பேர் இந்தியாவிலிருந்தும், 124,652 பேர் ஐக்கிய இராச்சியத்திலிருந்தும், 114,644 பேர் ரஷ்யாவிலிருந்தும் வந்ததாகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், ஜூலை மாதத்தில் இதுவரை 145,188 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக கூறியுள்ளன.

Share.
Leave A Reply

Exit mobile version