ஹைதராபாத்தில் 25 வயதுடைய குண்டலா ராகேஷ் என்னும் இளைஞர் பேட்மிட்டன் விளையாடிகொண்டிருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடந்து கொண்டிருக்கும் போது, விளையாடிக்கொண்டிருக்கும் போது, வங்கியில் நின்று கொண்டிருக்கும் போது, நாற்காலியின் அமர்ந்திருக்கு போது இப்படி ஏதோ ஒரு நிலையில் கண் இமைக்கும் நேரத்தில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு பலரும் உயிரிழந்த வீடியோக்களை சமீப காலங்களில் பார்த்திருப்போம்.

பெரியோர்கள் அதாவது வயதில் மூத்தவர்கள் என்றால் கூட பரவாயில்லை இளம் வயதினரும் சில சமயங்களில் சிறாரும் இப்படி மாரடைப்பால் உயிரிழப்பது பலரையும் அச்சத்தில் உறைய வைத்துள்ளது.

சமீபத்தில் கூட இதுபோன்ற திடீர் மரணங்கள் குறித்து ஓர் விவாதம் நடைபெற்றது. அதாவது, “திடீர் மாரடைப்பு மரணங்களுக்கு கொரோனா தடுப்பூசி காரணமாக இருக்கலாம்” என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவிக்க, அதற்கு மத்திய அரசு தரப்பில் ”கொரோனா தடுப்பூசிக்கும் மாரடைப்பு மரணங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், மீண்டும் அதுபோல ஒரு சம்பவம் ஹைதராபாத்தில் நடந்துள்ளது.

குண்டலா ராகேஷ் என்னும் 25 வயதுடைய இளைஞர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இவரது அப்பா கம்மம் பகுதியின் முன்னாள் தலைவராக இருந்துள்ளார். ராகேஷ் நேற்று இரவு ஹைதராபாத்தில் உள்ள உப்பல் மைதானத்தில் நண்பர்களுடன் பேட்மிட்டன் விளையாடிக் கொண்டிருந்த போது மயங்கி விழுந்து இருக்கிறார்.

அப்போது மயங்கி விழுந்த ராகேஷை மீட்டு அவரது நண்பர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்து விட்டதாக தெரிவித்திருக்கின்றனர். இதுபோன்ற பல சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன.

Share.
Leave A Reply

Exit mobile version