வரலாற்றுச் சிறப்பு பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா இன்று (29) காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

காலை 08.15 மணிக்கு வசந்தமண்டப பூஜையுடன் ஆரம்பமாகி தொடர்ந்து கொடியேற்றம் இடம்பெற்றது.

பிள்ளையார், முருகப்பெருமான், வள்ளி – தெய்வானை மூஷிகம், மயூரம், அன்னம் ஆகிய மூன்று தங்க வாகனங்களில் உள்வீதி உலா வந்து காட்சியளித்தனர்.

மகோற்சவம், தொடர்ந்து 25 நாட்கள் தொடர்ந்து இடம்பெறவுள்ளது.

மகோற்சவத்தில், மஞ்ச திருவிழா எதிர்வரும் 07 ஆம் திகதியும், மாம்பழ திருவிழா எதிர்வரும் 19 ஆம் திகதியும், சப்பரத் திருவிழா எதிர்வரும் 20 ஆம் திகதியும், தேர்த் திருவிழா 21 ஆம் திகதியும் இடம்பெறவுள்ளன.

தீர்த்த திருவிழா 22 ஆம் திகதி காலை இடம்பெற்று, மாலை கொடியிறக்கத்துடன் மகோற்சவம் நிறைவுபெறும்.

 

Share.
Leave A Reply

Exit mobile version